பாரிஸில் அஜித்தை சூழ்ந்து கொண்ட ரசிகர் கூட்டம்.. ரசிகர் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப்.. வைரலாகும் வீடியோ !

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் குமார் அவர்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது. அந்த வகையில் தற்போது அஜித்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க சென்ற அஜித்தை, ரசிகர்கள் திடீரென சூழ்ந்துகொண்டனர். அப்போது ரசிகர்கள் கூட்டத்தை பார்த்ததும் அவர்கள் அனைவருடன் அன்பாக பேசி நலம் விசாரித்து, பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அஜித். ரசிகர் ஒருவரின் டி-ஷர்ட்டிலும் தனது ஆட்டோகிராப்பை போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Latest video of #AK sir from Paris !
— TRENDS AJITH (@TrendsAjith) July 11, 2022
Credits : @AjithNetwork#AjithKumar #AK61#Valimai pic.twitter.com/jihU0ASR2J