'திரைக்கு வரும் முன்பே HD print': மிரட்டும் 'தமிழ் ராக்கர்ஸ்'... பரபரப்பான ட்ரைலர்

Arun vijays tamil rockerz trailer video getting viral on social media

பிரபல நடிகரான விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய். 1995ம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தவர் நடிகர் அருண் விஜய். இதனை தொடர்ந்து, பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி போன்ற பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Arun vijays tamil rockerz trailer video getting viral on social media

பாண்டவர் பூமி, இயற்கை போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. 2015ம் ஆண்டு என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மாஸ் ரோலில் நடித்திருந்தார். பின்னர், குற்றம் 23, செக்க சிவந்த வானம், மாஃபியா, தடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Arun vijays tamil rockerz trailer video getting viral on social media

இறுதியாக, இவர் நடிப்பில் யானை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது, சினிமா துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது ‘தமிழ் ராக்கர்ஸ்’ உள்ளிட்ட பைரஸி இணையதளங்கள். அவற்றை முடக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் அதை எல்லாம் மீறி பைரஸி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Arun vijays tamil rockerz trailer video getting viral on social media

ஏவிஎம் தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெப்தொடராக ’தமிழ் ராக்கர்ஸ்’. சோனி லைவ் ஓடிடியில் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த தொடரின் டீசர் & டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Arun vijays tamil rockerz trailer video getting viral on social media

இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரைலரில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிரபல நடிகரின் திரைப்படம் 10 நாட்களுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கண்ணீர் விட்டு கதறும் நிலையில், இந்த கூட்டத்தை கண்டுபிடிக்க காவல் அதிகாரி அருண்விஜய் களமிறங்குகிறார்.

Arun vijays tamil rockerz trailer video getting viral on social media

இதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? தமிழ்ராக்கர்ஸ் யார் என்பது கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த வெப்தொடரின் கதை. அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த வெப்தொடருக்கு விகாஸ் பாதிஷா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post