குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகும் VJ ரக்ஷன் ? வைரலாகும் பதிவு !
சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.
2 சீசன்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது சீசனில் வித்யுல்லேகா ராமன்,ரோஷ்னி ஹரிப்ரியன், ஸ்ருத்திகா அர்ஜுன், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அந்தோணிதாசன், மனோபாலா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, சுனிதா, மணிமேகலை, முகம்மது குரைஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், சரத் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். குக் வித் கோமாளி 3ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியைவிட்டு ரக்ஷன் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜய் டிவின் முக்கிய தொகுப்பாளரான இவர், விரைவில் ஹீரோவாக இருக்கிறார். யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், அதன் பூஜை புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கலக்கப்போவது யாரு சீசன் 5 6 7 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் ஹீரோவாக கமிட்டாகியுள்ள திரைப்படத்தில் விஷாகா திமன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் தீனாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.