அஜித், ரஜினி, சிம்பு குரலில் அரபிக் குத்து பாடல்.. வெளியாகி வைரலாகும் வீடியோ..

Arabic kuthu song in rajini simbu and ajith voice goes viral

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் காதலர் தினத்தன்று வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என தொடங்கும் இப்பாடலை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ரீல்ஸ் செய்து பதிவிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் உலகளவில் பிரபலம் பெற்று வரும் இப்பாடலை, ரசிகர் ஒருவர், தமிழ் நட்சத்திரங்கள் அஜித், ரஜினி, சிம்பு பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்று மிமிக்கிரி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

Share this post