கோவையில் துவங்கப்பட்ட முதல் ஒட்டக பால் பண்ணை.. ஒட்டகப்பால்'ல இந்த மருத்துவ குணம் இருக்காம்..

Camel milk has been initiated in coimbatore for the first time for its medical benefits

கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த பட்டதாரியான மணிகண்டன் என்பவர், மக்களுக்கு பயன்படும் நோக்கில் ஒட்டக பால் பண்ணையை இன்று அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது, தான் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டதாகவும் இந்த ஒட்டக பால் குடித்ததனால் தனக்கு நோயிலிருந்து தீர்வு கிடைத்தாக தெரிவித்தார்.

Camel milk has been initiated in coimbatore for the first time for its medical benefits

இது போல் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என அரசு அனுமதி பெற்று குஜராத் பகுதியில் இருந்து 6 ஒட்டகம் கொண்டு வந்து நீலாம்பூரை அடுத்த குளத்தூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை அமைத்து பால் விநியோகம் செய்வதாக தெரிவித்தார். மருத்துவ பயன்பாட்டிற்காக ஒட்டக பால் வாங்க வரும் மக்களுக்கு சலுகை விலையில் கொடுப்பதாக தெரிந்தார்.

தென்னிந்தியாவில் முதல் முறையாக இந்த முயற்சியை எடுத்திருப்பதாகவும், விரைவில் தமிழகம் முழுவதும் ஒட்டக பண்ணை அமைக்கப்படும் என உறுதியளித்தார். குஜராத் மாநில ஒட்டக ஆராய்ச்சியாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

Share this post