Viral Video: எனக்கும் ஆண்ட்ரியாக்கும் True Love'னு சொல்ல முடியாது.. அப்போ எனக்கு 19 வயசு.. Break Up காரணம் குறித்து பேசிய அனிருத்..!

Anirudh openly talks about break up with andrea video getting viral

பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர்.

Anirudh openly talks about break up with andrea video getting viral

3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மாரி, மான் கராத்தே, நானும் ரவுடி தான், பேட்ட, டாக்டர், பீஸ்ட், டான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Anirudh openly talks about break up with andrea video getting viral

மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். அந்த பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார். அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

Anirudh openly talks about break up with andrea video getting viral

இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார். விக்ரம் படத்தை தொடர்ந்து, பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

Anirudh openly talks about break up with andrea video getting viral

படங்களில் தன்னுடைய இசை மூலம் பட்டையை கிளப்பி வரும் அனிருத், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. பீப் பாடல் துவங்கி சுச்சி லீக்ஸ் வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது ஆபாச வீடியோ என்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பெரும் வைரலானது. சுச்சி லீக்ஸ்ஸின் போது அனிருத் மற்றும் ஆண்ட்ரியாவின் புகைப்படம் ஒன்று வைரலானது. மேலும், அனிருத்தும், ஆண்ட்ரியாவும் காதலித்தனர் என்று கூறப்பட்டது.

Anirudh openly talks about break up with andrea video getting viral

ஆண்ட்ரியாவுடனான காதல் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் அனிரூத் ஒரு பேட்டியில் ஒப்பனாக பேசி இருக்கிறார். அதில் ‘நானும் ஆண்ட்ரியாவும் பிரேக் கப் செய்துவிட்டோம். உண்மையான காதல் என்று சொல்ல முடியாது. நான் அவரை காதலிக்கும் போது எனக்கு 19 அவருக்கு 25 வயது. இருவருக்கும் வயது செட் ஆகவில்லை. அதனால் தான் பிரிந்துவிட்டோம்’ என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Anirudh openly talks about break up with andrea video getting viral

இது ஒருபுறம் இருக்க, தற்போது இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது, நீங்கள் கேட்ட மூவரில் அனிரூத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை. அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்திருந்தார்.

Anirudh openly talks about break up with andrea video getting viral

அதே போல சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வலம் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை, அனிருத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கிசுகிசுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Anirudh openly talks about break up with andrea video getting viral

Share this post