"விக்ரம்'ல என்னோட என்ட்ரி சீன்ல நடிக்க பயந்தேன்.." விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட் !

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்..

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது.

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்ததது என கெத்து காட்டி வருகிறார்.

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

இந்த கதாபாத்திரத்தின் எண்ட்ரி சீன் பற்றி நடிகர் விஜய் சேதுபதி பேசிய பேட்டி வீடியோ வைரல் ஆகி வருகிறது. இப்படத்தில் என்ட்ரி சீனில் சட்டை இன்றி நடித்திருப்பார். இந்த சீன் செம்ம மாஸாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த சீனில் சட்டை அணியாமல் தொப்பையுடன் நடித்தபோது, ரசிகர்கள் கிண்டலடித்து விடுவார்களோ என்று பயந்ததாக தெரிவித்துள்ளார்.

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

இதுகுறித்து அவர் கூறியதாவது : “இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சட்டையில்லாமல் நடிக்க வேண்டும் என சொன்னபோது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என பயம் இருந்தது. முதலில் நான் பனியன் அணிந்தபடி நடிக்கட்டுமா என கேட்டேன். ஆனால் லோகேஷ் சட்டையின்றி நடித்தால் தான் நன்றாக இருக்கும் என சொல்லிவிட்டார்.

Vijay sethupathi fear of acting in entry scene of vikram movie without shirt

இயக்குனரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே நடிகர்களின் கடமை என்பதால் சட்டை இன்றி பயந்தபடியே நடித்தேன். படம் ரிலீசானதும் நிச்சயம் கிண்டலடிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் ரசிகர்கள் அதனை நல்ல மனசோடு ஏற்றுக்கொண்டார்கள். சந்தோஷமாக இருந்தது” என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Share this post