Zomato மூலம் ரசிகர்களுக்கு Free Treat வைக்கும் அனிருத்.. வைரலாகும் பதிவு !

Anirudh announces free treat contest on zomato

பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர்.

Anirudh announces free treat contest on zomato

3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மாரி, மான் கராத்தே, நானும் ரவுடி தான், பேட்ட, டாக்டர், பீஸ்ட், டான், காத்துவாக்குல ரெண்டு காதல் என பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Anirudh announces free treat contest on zomato

மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். அந்த பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார். அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

Anirudh announces free treat contest on zomato

இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார். விக்ரம் படத்தை தொடர்ந்து, பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

Anirudh announces free treat contest on zomato

படங்களில் தன்னுடைய இசை மூலம் பட்டையை கிளப்பி வரும் அனிருத், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. பீப் பாடல் துவங்கி சுச்சி லீக்ஸ் வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருடன் அனிருத் பெயர் காதல் சர்ச்சையில் அடிபட்டு வந்தது.

Anirudh announces free treat contest on zomato

அனிருத் படங்களுக்கு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வகையில், பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவுக்காக அனிருத் இசையமைத்திருந்த ‘சும்மா செம்ம சோமேட்டோ’ என்கிற பாடல் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது.

Anirudh announces free treat contest on zomato

இப்பாடல் யூடியூபில் 7.8 மில்லியன் பார்வைகளை பெற்றதற்காக அனிருத் சோமேட்டோ நிறுவனத்திடம் ட்ரீட் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் சோமேட்டோ நிறுவனத்துடன் ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார். அதன் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் படு வைரல் ஆகிறது. அந்த உரையாடலின் படி, “நண்பா சோமேட்டோ ரொம்ப நாள் ஆச்சுல? ‘சும்மா செம்ம’ பாடல் 7.8 மில்லியன் வியூஸ்களை பெற்றதற்கு எப்போ ட்ரீட் குடுக்க போறீங்க” என அனிருத் கேட்க, இதற்கு பதில் அளித்த சோமேட்டோ நிறுவனம் , “லிரிக்ஸ் ப்ரோவுக்கு இல்லாமையா? சொல்லுங்க நான் இப்போ என்ன பண்ணனும்? என கேட்டது.

Anirudh announces free treat contest on zomato

இதற்கு அவசரப்பட்டு ஓகே சொல்லிட்டியே குமாரு என ரிப்ளை செய்த அனிருத், எனக்கு ஒரு பீட்சா போதும், ஆனா என்னோட ரசிகர்களுக்கு நான் ட்ரீட் தரணும், அதனால உங்களுக்கு சோமேட்டோவுல ட்ரீட் வேணும்னா, ஏன் உங்களுக்கு நான் இத கொடுக்கணும்னு கமெண்ட் பண்ணுங்க. 100 சுவாரஸ்யமான பதில் அனுப்புபவர்களுக்கு இலவசமா ட்ரீட்.. சோமேட்டோ ஓகே தான? என பதிவிட, இதற்கு பதிலளித்த சோமேட்டோ, இந்த டுவிஸ்ட நாங்க எதிர்பாக்கல ப்ரோ! இருந்தாலும் ஆரம்பிக்கலாமா? என பதிவிட்டிருந்தது.

Share this post