இந்த வயதில் இப்படியொரு கேவலமான ஆடிட்டியூட்.. நடிகை அனிகாவின் செயலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

குழந்தை நட்சத்திரமாக சோட்டா மும்பை என்னும் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இதனைத் தொடர்ந்து, Kadha Thudarunnu, 4 ப்ரெண்ட்ஸ், ரேஸ் போன்ற பல மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
பின்னர், என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அஜித், திரிஷா மகளாக நடித்தார். அதன் பின்னர், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித், நயன்தாரா மகளாக நடித்தார்.
தற்போது, மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. திரைப்படங்கள் மட்டுமல்லாது குறும்படங்கள், மியூசிக் ஆல்பம் விடியோக்கள், வெப் சீரீஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அனிகா, தற்போது, ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது, கதாநாயகியாக புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ஓ மை டார்லிங் படம் வெளியாகியது. இப்படத்தில் எல்லைமீறி முத்தக்காட்சி நடித்து ஷாக் கொடுத்தார்.
தற்போது புட்ட பொம்மா படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அனிகா. சமீபத்தில் கல்லூரியில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், தன்னை பேச அழைத்த போது முகம் சுளித்த வண்ணம் ஸ்டைலாக மோசமான ஆடிட்டியூட் காட்டியுள்ளார். இதன் வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர்.