கழுத்தில் மஞ்சள் கயிறு.. திடீரென ஷாக் கொடுத்த நடிகை அபிராமி..!

abirami venkatachalam with yellow rope status getting viral on social media

மாடலிங் துறையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்றவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். சன் டிவியில் ‘ஸ்டார் வார்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இவர், ‘நோட்டா’ திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

abirami venkatachalam with yellow rope status getting viral on social media

அதன் பின்னர், ஹிந்தியில், அமிதாப் பச்சன், டாப்சீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

abirami venkatachalam with yellow rope status getting viral on social media

அதில் நல்ல ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர், வல்லமை தாராயோ என்னும் வெப் சீரிஸ், விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி என அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தற்போது நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் இவர், பெரிய படங்கள் மற்றும் சீரியல்களில் தென்படாத நிலையில், வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார்.

abirami venkatachalam with yellow rope status getting viral on social media

இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் OTTக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள மற்றும் புது வாய்ப்புகளுக்காகவும் தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார்.

abirami venkatachalam with yellow rope status getting viral on social media

சமீபத்தில் கையில் நாஜநாகம், முதுகில் நடராஜர் என டாட்டூ குத்தி போஸ் கொடுத்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது, திடீரென கழுத்தில் மஞ்சள் கயிறுடன் எடுத்த குளோசப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமாகிவிட்டதா என்று ஷாக் ஆகி வருகின்றனர். அதில் யாரென்று தெரியாத நபரிற்காக நோன்பு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

abirami venkatachalam with yellow rope status getting viral on social media

Share this post