''அசுரன்'ல வர அந்த பாட்டு என்னுடையதுனு பொய் சொன்னாரு'.. சீமானை விமர்சித்த Anchor.. வைரல் வீடியோ!
பாரதிராஜா & மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் அசிஸ்டென்ட் ஆக பணியாற்ற தொடங்கியவர் சீமான். முதன் முதலாக, பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இயக்கம் மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்த இவர், பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மாயாண்டி குடும்பத்தார் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, அரசியலில் முழு நேரம் ஈடுப்பட்டு வரும் இவர், நாம் தமிழர் கட்சியின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
அவ்வப்போது, மேடைகளில் இவர் பேசும் பேச்சு மீம்ஸ் மற்றும் ட்ரோல்களில் சிக்குவது வழக்கம். இந்நிலையில், இவர் சமீபத்தில் பங்கேற்றிருந்த உரையாடலில், ஒரு பிரபல பாடலை தனது பாடல் என பொய் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் அசுரன். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 67வது தேசிய விருதுகள் அறிவிப்பில் இந்த படத்திற்கு பல பிரிவுகளில் தேசிய விருதுகள் வாங்கியிருந்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘எள்ளு வயப் பூக்களையே’ என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. இந்நிலையில், இந்த பாடலை சீமான் வரிகளில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்ற ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது, இந்த பாடல் குறித்த பேட்டி வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஊடகவியலாளர் விஷன் என்பவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவம் குறித்தும், அரசியல் தலைவர்களுடன் உரையாடல் அனுபவம் பேசி இருந்தார். அப்போது அதில் அவர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் இந்த பாடல் குறித்து கூறியிருந்தது, மைக் எடுத்தால் பொய் பேசுவது ஒன்று, வாழ்க்கையே பொய்யாக உள்ளது. எள்ளு வயப் பூக்களையே பாடலின் மெட்டு என்னுடைய தான்.
நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளேன். என்னுடைய நாட்டுப்புற பாடலை தழுவி தான் எள்ளு வயப் பூக்களையே பாடலின் மெட்டு அமைக்கப்பட்டது. வெற்றிமாறன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதற்கு கிரெடிட் தருகிறேன் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் அந்த தலைவர் பகிர்ந்து கொண்டார் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தான் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கின்றனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.
Bro @idumbaikarthi நம்ம அண்ணனயா சொல்றாப்ல? pic.twitter.com/AOGgRP9vJp
— U2 Brutus (@U2Brutus_off) October 14, 2022
அண்ணன் @SeemanOfficial அடுத்தமுறை @ThamizhVishan போன்ற கேடு கெட்ட பிறவிகளை எல்லாம் கூட்டி வந்து விருந்தளிப்பதை தவிர்க்க வேண்டும்.. pic.twitter.com/Y0hddRroyU
— spartan (@Maravan26) October 12, 2022