AK61 தீபாவளி ரிலீஸ் இல்லை.. வெளியான புதிய ரிலீஸ் தேதி..

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியிருந்தார்.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

இப்படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

இந்நிலையில், அஜித் குமார் ஏர்போட்டில் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலாகி வந்தது. தற்போது, அஜித் குமார் வெளிநாட்டில் பைக்கில் பயணம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

இந்நிலையில், AK61 ஷூட்டிங்காக பெல்ஜியத்தில் இருக்கும் அஜித் அவர்களின் புது புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.

Ajithkumar ak61 release not for diwali date got postponed to december

இதனிடையே AK61 திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிப்பு எதும் வெளியாகாமல் உள்ளது. மேலும் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது அஜித்தின் AK61 திரைப்படம் தீபாவளியில் வெளியாகாது, வரும் டிசம்பர் 8ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Share this post