தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காலில் 3 விரல்கள் அகற்றம்.. காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை !

3 fingers in leg has been removed for former actor vijayakanth due to blood circulation issue

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இனிக்கும் இளமை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஜயகாந்த், சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.

3 fingers in leg has been removed for former actor vijayakanth due to blood circulation issue

நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 40 வருட திரையுலக வாழ்க்கையில் 150 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

3 fingers in leg has been removed for former actor vijayakanth due to blood circulation issue

பின்னர், அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கிய விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். தற்போது உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

3 fingers in leg has been removed for former actor vijayakanth due to blood circulation issue

தீவிர உடல்நல குறைவால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

3 fingers in leg has been removed for former actor vijayakanth due to blood circulation issue

விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

3 fingers in leg has been removed for former actor vijayakanth due to blood circulation issue

அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share this post