AK62 படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் ? வெளியான மாஸ் அப்டேட்

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் தனது விடுமுறை நாட்களைக் கழிக்க குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றது, திருச்சி ரைபிள் க்ளப்பில் இருந்தது என அவ்வப்போது, இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலதும் இணையத்தில் செம வைரலாகி வந்தது.
தற்போது, அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவுள்ள AK62 திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அவரை அணுகி பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
எல்லாம் சரியாக நடந்தால், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிப்பார் என்றும், இதுவே அஜித்தும் ஐஸ்வர்யாவும் ஜோடியாக நடிக்கும் முதல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் அஜித் -ஐஸ்வர்யா இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.