'நன்றி' தெரிவித்து கடிதம் எழுதிய நடிகர் அஜித்.. வைரலாகும் புகைப்படம் !

Ajith kumar wrote thanking letter to kerala team

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வலிமை திரைப்படம் வெளியாகி திரையரங்களில் வெற்றி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் AK 61 படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Ajith kumar wrote thanking letter to kerala team

இச்சமயத்தில், நடிகர் அஜித் சமீபத்தில் கேரளாவிற்கு சென்றிருந்தார். அங்குள்ள கோவிலில் அவர் தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், நடிகர் அஜித் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Ajith kumar wrote thanking letter to kerala team

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்கள் ஆன உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவருக்கும், அவர்களுடைய, குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்து, இந்த கடிதத்தை எழுதியுள்ளார் அஜித்.

இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..

Share this post