பேருந்தில் நின்றபடி மக்களோடு பயணித்த அஜித்.. வைரலாகும் வீடியோ !

ajith kumar travels in crowded bus with people

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

ajith kumar travels in crowded bus with people

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

ajith kumar travels in crowded bus with people

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ajith kumar travels in crowded bus with people

இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் தனது விடுமுறை நாட்களைக் கழிக்க குடும்பத்துடன் பாரிசுக்கு சென்றிருந்தார். அங்கு இருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது, அவருடன் எடுத்து கொண்ட புகைபடங்களை வெளியிட அது படு வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.

ajith kumar travels in crowded bus with people

தன்னுடைய விடுமுறை நாட்களை கழிந்து விட்டு, திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ரைபிள் கிளப்பிற்கு சென்றிருந்தார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது.

ajith kumar travels in crowded bus with people

தற்போது மீண்டும் ஷூட்டிங் திரும்பியுள்ள அஜித், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டிணம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல பயணிகள் அனைவரையும் பஸ் ஒன்றில் அழைத்து செல்வர். அப்படி இன்று காலை அஜித் சென்னை விமான நிலையத்தில் ஒரு பேருந்தில் கூட்டமாக இருந்தபோதிலும் அதில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார்.

ajith kumar travels in crowded bus with people

அவர் பேருந்தில் நின்றபடி பயணித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மக்கள் கூட்டத்தை தவிர்க்க நினைக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக மிகவும் எளிமையான மனிதராக அஜித் இருப்பதை பார்த்து வியந்து போயினர். சிலரோ அவரது எளிமையை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Share this post