கணவரை பிரிவதாக அறிவித்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் ட்வீட் !

biggboss tamil season 2 celebrity announces divorce viral tweet

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில், கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும், புகழும் கிடைக்கும் என்பதே இந்த ஷோவின் ஸ்பெஷல்.

biggboss tamil season 2 celebrity announces divorce viral tweet

அவ்வாறு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிவந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் கடந்த 2019ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான அஞ்சானை திருமணம் செய்து கொண்டார் வைஷ்ணவி.

biggboss tamil season 2 celebrity announces divorce viral tweet

மூன்று வருட காதல் வாழ்க்கை, மூன்று வருட திருமண வாழ்க்கை என மொத்தம் 6 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

biggboss tamil season 2 celebrity announces divorce viral tweet

இந்த பிரிவு குறித்து வைஷ்ணவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “6 வருடங்களுக்கு மேல் ஒன்றாக இருந்த நானும், அஞ்சானும் பிரிய முடிவெடுத்துள்ளோம். நான் இன்னும் அவனை லவ் பண்றேன். ஆனால் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்க, பிரிவதே சிறப்பானது என நீண்ட ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்தோம்.

biggboss tamil season 2 celebrity announces divorce viral tweet

எங்கள் இருவருக்கும் இடையே நிறைய குணங்கள் பொதுவாக இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை உணர எங்களுக்கு இத்தனை வருடங்கள் ஆனது. என்ன நடந்திருக்கும் என யூகிக்க வேண்டாம், எங்களுக்கு எதுவும் மோசமாக நடக்கவில்லை. ப்ளீஸ் எங்களுக்காக யாரும் வருந்தாதீர்கள், ஏனெனில் நானும் அஞ்சானும் பிரிந்ததற்காக வருந்தவில்லை.

biggboss tamil season 2 celebrity announces divorce viral tweet

நாங்கள் இன்னும் நண்பர்களாகவே இருக்கிறோம். தம்பதிகளாக இருப்பதை விட நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது” என அந்த பதிவில் வைஷ்ணவி குறிப்பிட்டுள்ளார் .

Share this post