தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் திறக்கவிருக்கும் அஜித்..! இன்னோரு சஸ்பென்ஸ் சர்ப்ரைஸ் தெரியுமா ?

Ajith kumar to act as hotel owner in tamilnadu in ak62 movie

போனி கபூர் - எச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் இதே கூட்டணி AK61 படத்தில் இணைந்துள்ளது.

இப்படத்திற்கான ஷூட்டிங்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து அதற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது.

இப்படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வில்லனாக சார்பெட்டா பரம்பரை வில்லன் ஜான் கொகேன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Ajith kumar to act as hotel owner in tamilnadu in ak62 movie

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 9 ஏக்கரில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், AK62 படத்தின் கதை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஓட்டல்கள் நடத்துபவராக நடிகர் அஜித் நடிக்க உள்ளதாகவும், சாதாரண மனிதராக இருந்து கடின உழைப்பால் முன்னேறும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

Share this post