சீரியலில் காத்துவாக்குல ரெண்டு காதல் செய்யும் கோபியின் நிஜ மனைவி யார் தெரியுமா ? செல்பி க்ளிக் இதோ

Baakiyalakshmi fame actor sathish kumar real wife photo getting viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாக்கியலட்சுமி தொடர் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று.

சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.

Baakiyalakshmi fame actor sathish kumar real wife photo getting viral

கோபி கதாபாத்திரம் குறித்து அதிக மீம்ஸ் பதிவிட்டு வரும் ரசிகர்கள், இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் வரும் கோபி கதாபாத்திரம் குறித்து செம மீம்ஸ், கலாய் என நெட்டிசன்கள் பாடாய் படுத்தி வருகின்றனர்.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. கோபியின் அப்பா பிறந்தநாளை கொண்டாட இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.

இதில் ஹைலைட்டாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவர்களின் செயல்களுக்கு கோபியின் ரியாக்ஷன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனது குடும்பத்தையும், ராதிகாவையும் சமாளிக்கவே போராடும் கோபி இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார்.

Baakiyalakshmi fame actor sathish kumar real wife photo getting viral

கத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை கம்பேர் செய்து நெட்டிசன்கள் வெச்சு செய்து வருகின்றனர். சீரியலில் ஒரு பக்கம் மனைவி மற்றும் இன்னொரு பக்கம் காதலி என ஜாலியாக இருக்கும் கோபி மீது இல்லத்தரசிகள் கொஞ்சம் கோபத்தில் தான் உள்ளார்கள்.

இந்த நிலையில் கோபி என்கிற சதீஷின் நிஜ மனைவி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Baakiyalakshmi fame actor sathish kumar real wife photo getting viral

Share this post