ரஜினி - அஜித் திடீர் சந்திப்பு.. வைரலாகும் போட்டோ.. திரையுலகினரை குழப்பிய புகைப்படம்.. ஃபேன்ஸ் செய்த சம்பவம் !

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இவரது யதார்த்தம், குணம், சாந்தம் என அனைத்து பண்புகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருபவர்.

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

தற்போது, ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் தலைவர்169 படத்தில் நடிக்க இருக்கிறார். ஷூட்டிங் பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது. AK61 படத்தின் ஷூட்டிங் பணி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

இந்நிலையில் நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வைத்து அவரை சந்தித்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோ ரஜினியின் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது.

Ajith and rajinikanth sudden meet photo viral on social media

ஆனால் உண்மை யாதெனில், அவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அஜித் ரசிகர்கள் செய்த எடிட்டிங் என கூறுகின்றனர். இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள், உண்மை பொய் தெரியாது வைரலாக்கி வருகின்றனர்.

Share this post