'நான் பலாத்காரம் செய்யப்பட்ட காட்சி எல்லோரிடமும் உள்ளது.. என் வாழ்க்கையே சீரழிந்து விடும்..' நடிகையின் குமுறல் !

Actress worried about sexual assault case and video that getting spread

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் திலீப். தயாரிப்பாளர், நடிகர், தொழிலதிபர் என பல அவதாரங்களுடன் வலம் வந்த திலீப், 2017ம் ஆண்டு பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

கோர்ட் உத்தரவின் பெயரில் கஸ்டடியில் பல நாள் சிறைவாசம் இருந்தார். இதனால், திரைத்துறையில் இருந்து இவருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து மீண்டும் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

Actress worried about sexual assault case and video that getting spread

திலீப் சம்மந்தமான வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை தீர விசாரித்து பதிலளிக்க மேலும் மூன்று மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

Actress worried about sexual assault case and video that getting spread

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான காட்சிகள் இதுவரை நீதிமன்றத்தில் இரண்டு முறை பார்க்கப்பட்டுள்ளது. முக்கிய ஆதாரங்களும் கிடைத்துள்ளன, தற்போது பல காட்சிகள் நடிகர் திலீப் கைக்கு சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Actress worried about sexual assault case and video that getting spread

இது குறித்த கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறினார். அதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இனியும் ஒரு நாள் கூட வழக்கு விசாரணை நீட்டிக்க போலீசுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஐந்து மாதங்களுக்கு மேலாக போலீசார் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தியும் திலீப்புக்கு எதிரான ஆவணங்கள் கிடைக்கவில்லை என கூறினார்.

Actress worried about sexual assault case and video that getting spread

இதைத்தொடர்ந்து, நடிகையின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள் பலரிடமும் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. ஒருவேளை அந்த காட்சிகள் வெளியானால் எனது வாழ்க்கையே மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்படும். எனது எதிர்காலம் சீரழிந்து விடும்.

Actress worried about sexual assault case and video that getting spread

கடந்த ஐந்து வருடங்களாக நான் இருட்டில் தவித்து வருகிறேன். எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சமூகத்தில் நீதி கிடைக்காத சூழ்நிலை தான் இருந்து வருகிறது. ஒருவேளை விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ள ஆதாரங்களின் முறைகேடு நடந்தால் அது மிகவும் ஆபத்தானது. எனது வழக்கில் நீதி கிடைக்க வேண்டும்.

Actress worried about sexual assault case and video that getting spread

இதற்காக முறையாக விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை வழங்கக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் அந்த நடிகை சார்பில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Share this post