Viral Video : சினேகாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. உற்சாகத்தில் ஐஸ்வர்யா பதிவிட்ட பதிவு

Aiswarya rajesh and sneha acted together for an advertisement

தொகுப்பாளினி, நடன கலைஞர் என படிப்படியாக முன்னேறி தற்போது நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா,உட்பட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரம் நடித்ததன் மூலம் இவரை தமிழ் மக்களிடம் கொண்டு சென்றது.

இப்படி கடும் முயற்சியில் முன்னேறிய இவர், தனது வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சினேகா ஆகிய இருவரும், விளம்பரம் படமொன்றில் இணைந்து நடித்துள்ளனர். சினேகா உடன் நடித்தது பெருமையாக இருந்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது சினேகாவின் படப்பிடிப்பை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மூலையில் நின்று எனது அம்மாவுடன் பார்த்தேன். இன்று அவருடன் ஒரு விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Share this post