ஜீ தமிழில் இருந்து பிரபல சேனலுக்கு தாவிய செம்பருத்தி ஷபானா.. வெளியான புகைப்படங்கள் !
மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஷபானா ஷாஜஹான். அதிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் குடும்ப தலைவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் ஷபானா.
மலையாள தொடரான ‘விஜயதசமி’ மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், பார்வதி என்னும் ரோலில் நடித்து, தனது நடிப்பின் மூலம் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து தந்த சாதனை இவரை சேரும். Cute doll போல இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இளைஞர்கள் பலர் இவரது சோசியல் மீடியா பக்கங்களை பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில், பிரபல சீரியல் நடிகர் ஆர்யன் அவரை காதல் திருமணம் செய்தார் ஷபானா. அதன் வீடியோ கிளிப்ஸ் மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது. ஆர்யன் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அவர்கள் திருமணத்தில் ஷபானாவின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.
சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, செம்பருத்தி சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. அடுத்து ஷபானா என்ன சீரியலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் இருந்து சன் டிவிக்கு அடியெடுத்து வைத்துள்ள இவர், ஜோடி என்ற தொடரில் ஷபானா நடிக்க இருக்கிறார். இந்த சீரியலின் பூஜை நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.