மணிரத்னம் படத்தை மிஸ் பண்ணிய சாய் பல்லவி.. ச்ச நடிச்சிருந்தா நல்லா தான் இருந்திருக்கும் !

Actress sai pallavi missed director maniratnam movie

பல்லவி அனு பல்லவி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமான இயக்குனர் மணி ரத்னம், இதனைத் தொடர்ந்து, பகல் நிலவு, இதய கோவில், மௌன ராகம் போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார். கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Actress sai pallavi missed director maniratnam movie

இப்படத்தின் டயலாக், சீன்கள் அனைத்தும் இன்று ரசிக்க கூடியதாக அமைந்தது. அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பாம்பே, திருடா திருடா, இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு என தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கினார். காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்போது, இவரது பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Actress sai pallavi missed director maniratnam movie

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக கொண்டு, இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், விக்ரம் பிரபு ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Actress sai pallavi missed director maniratnam movie

இவரது இயக்கத்தில் திரைப்படம் என்றாலே நடிகர் நடிகைகள் ஆர்வத்துடன் பங்கேற்கும் நிலையில், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்த நடிகை மறுப்பு தெரிவித்தது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Actress sai pallavi missed director maniratnam movie

காற்று வெளியிடை படத்தில் சாய் பல்லவியை தான் முதலில் நடிக்க வைக்க இருந்தாராம் மணிரத்னம். ஆனால், சில காரணங்களால் அவர் மறுக்கவே, அதன் பின் அதிதி ராவை அந்த படத்தில் ஹீரோயினாக மணிரத்னம் நடிக்க வைத்திருக்கிறார்.

Actress sai pallavi missed director maniratnam movie

Actress sai pallavi missed director maniratnam movie

Share this post