துவண்டு போன ரஜினிக்கு சிவாஜி செய்த பெரிய உதவி.. என்னனு தெரியுமா..?
தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இன்னும் தனக்கென்ற தனி அடையாளத்தை கொண்டு விளங்கி வருபவர் நடிகர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பு, முக பாவனைகள் என அதற்கு ஈடு இணை தற்போது வரை இவருடைய நடிப்புக்கு நிகர் சிவாஜி என்றுதான் சொல்லணும். அந்தளவிற்கு தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன்.
இந்நிலையில், நிறைய நடிகர்களுக்கு உதவியுள்ள சிவாஜி அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு கைகொடுத்து உதவியது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது 200வது படத்திற்கு முன்பாக 1978ம் ஆண்டு ஜஸ்டிஸ் கோபிநாத் என்ற படத்தில் சிவாஜி நடித்திருந்தார். இப்படம் இயக்குனர் யோகானந்த் இயக்கத்தில் வியட்நாம் வீடு சுந்திரம் திரைக்கதை எழுதியிருந்தார்.
இப்படத்தில், முள்ளும் மலரும், பைரவி போன்ற கணிசமான வெற்றிப்படங்களுக்கு பிறகு ரஜினி காந்திற்கு நடிகர் திலகம் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. இப்படத்தின் கதையில் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடிக்க ரஜினிக்கு வாய்ப்பு கிடைத்தது. “ஜஸ்டிஸ் கோபிநாத்” படத்தில் நேர்மையான நீதிபதியாக இருக்கும் சிவாஜி, குற்றம் செய்யாத நபர் முருகனை தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பிவிடுவார். இதனால் முருகனது மனைவி தற்கொலை செய்து கொள்வார். இதனால் முருகனின் மகன் ரஜினியை தனது பிள்ளை போல சிவாஜி வளர்த்து வருவார்.
பெரியவனாக வளரும் ரவி(ரஜினி), சாதி கடந்து உமா என்ற பெண்ணை காதலிக்கிறார். இந்த நேரம் பார்த்து ரவியின் தந்தை சிறையில் இருந்து வெளியில் வருகிறார். தந்தை வந்த பின்னர் தன்னுடைய மனைவி இறந்த விஷயத்தை அறிந்து மனமுடைந்து போன முருகன் மகன் ரவியை தேடுகிறார். இந்நிலையில், உமாவின் தந்தை தன்னுடைய மகளை ரவிக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்க, ரஜினிக்கு தன்னுடைய தந்தை முருகன் என்று தெரிய வருகிறது.
அதே போல ரஜினி காதலிக்கும் பெண் தன்னுடைய அப்பாவை சிறைக்கு தள்ளியவர் என தெரிய வருகிறது. இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்யம் நிறைந்த கதையாக இருந்தாலும், வெற்றியை கொடுக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இப்படத்திற்கு பிறகு வெறும் 6 நாட்களில் ரஜினி நடித்த “ப்ரியா” படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேலே ஓடி வெள்ளிவிழா கண்டது. இந்நிலையில், கடந்த 1978ம் ஆண்டு ரஜினி - சிவாஜி நடிப்பில் வெளியான “ஜஸ்டிஸ் கோபிநாத்” படம் இன்று 44வது வருடத்தை நிறைவு செய்தது.