நடிகர் பார்த்திபன் மரணம்? தீயாக பரவும் ட்வீட்.. நடிகரின் பதில் இதோ

actor parthiban tweets on rumours going about his death

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவு நிழல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையராக நடித்து அசதியிருந்தார்.

actor parthiban tweets on rumours going about his death

தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் நடித்து வரும் இவர் 52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு என்னும் தலைப்பில் தனது அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார். இந்நிலையில், நடிகர் பார்த்திபன் திடீரென உயிரிழந்ததாக அதிர்ச்சி அளிக்கும் வதந்தியை ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் பரப்பியுள்ளனர். இது குறித்து நடிகர் பார்த்திபன் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

actor parthiban tweets on rumours going about his death

அதில் அவர், நொடிகளில் மரணமடைவதும், மறுபடியும் உயிர்த்தெழுவதும் இயற்கை தான். ஆனால் நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் தான் புரியவில்லை. நெகட்டிவிட்டிகளை பரப்ப இது போல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம், மக்களுக்கும் பரப்புவோம் என்று அப்பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.

actor parthiban tweets on rumours going about his death

Share this post