மேடையில் மோசமாக கேலி செய்த பாலகிருஷ்ணா.. பதிலடி கொடுத்த ‘நாகர்ஜுனா அக்கினேனி’ குடும்பம்.
தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக டாப் நடிகராக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.
இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் கடந்த 13ம் தேதி தெலுங்கு சினிமாவில் வெளியானது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பாலகிருஷ்ணா பேசும் போது “அக்னினேனி தொக்கினேனி ..அ அ ரங்காராவ், ஈ ஈ ரங்கராவ் என தெலுங்கில் பிரபல நடிகர்களான அக்னியோனி நாகேஸ்ராவ் பற்றியும், குணச்சித்திர நடிகர்களான எஸ் வி ரங்காராவ் பற்றியும் கேலி செய்யும் முறையில் பேசியுள்ளார்.
இது சர்ச்சையாக மாறி இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஏனென்றால் அக்கினேனி நாகேஸ்வர ராவ், என் டி ராமராவ் போன்றவர்கள் தெலுங்கு சினிமா வளரும் காலத்தில் பல சாதனைகளை புரிந்தவர்கள். இவர்களது வாரிசுகள் இப்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் பாலகிருஷ்ணா அக்கினேனி, ரங்கராவ் இவர்களை கேலிசெய்த்தால் நாகேஸ்வராவின் பேரன்கள் ராகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் ரங்கா ராவ் மற்றும் அக்கினேனி போன்றவர்கள் தெலுங்கு சினிமாவின் தூன்களாகவும், பெருமையாகவும் இருந்து பங்களித்தவர்கள். இவர்களை குறைவாக பேசுவது நம்மை நாமே தாழ்த்தி பேசுவதாக இருக்கும் என கூறியுள்ளனர். இந்த பிரெச்சனை இனி எப்படி முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Akkineni Tokkineni 🤣🤣🤣 pic.twitter.com/pvVp4cjZKC
— ѶᏋຖӄค₮ (@megacpr_only) January 22, 2023
Sry Naga Chaitanya garu...meku teliyadu anukunta
— Møhámmêd Âfzál محمد افضل (@ShaikAfzal_YSJ) January 24, 2023
Ayana blood veru..ayana breed veru 🙂 pic.twitter.com/3Xczx2IE1A