விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா..! Thalapathy 67 அப்டேட் ..! தரமான சம்பவம் காத்திருக்கா ?

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் 2 -வை அடுத்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கமல் நடித்த விக்ரம் படம் வெளியாக உள்ளது.மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.
வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாநாளை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.இந்த விழாவிற்கு ரஜினி, விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, நாளை நடைபெற உள்ள விக்ரம் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி 67 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விழாவில் விஜய் நிச்சயம் கலந்து கொள்வார் மற்றும் தளபதி 66 லுக்கில் விஜய் கலந்து கொள்ளவார் என்பதால் அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
அதே போல் ராஜ்பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பும் இந்த விழாவில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல தரமான சம்பவங்கள் நடக்கும் என கூறப்படுகிறது.