7 நாள் என்னை நிர்வாணப்படுத்தினார் இயக்குனர் பாலா.. நடிகர் சொன்ன உண்மை தகவல்

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் தனக்கென தனித்துவமான கதை மற்றும் திரைப்படங்களை உருவாக்கி ஹிட் கொடுப்பவர் இயக்குனர் பாலா. அவர் படத்தில் ரியாலிட்டிக்காக நடிகர்களை கஷ்டப்படுத்தி நடிப்பை வாங்கும் திறமை கொண்டவர். இதனால் நடிகர் நடிகைகளே அவர் படத்தில் யோசித்து நடிக்க சம்மதம் கூறுவார்கள் என சொல்லப்படுகிறது.
கலைஞர்களை படுமோசமாகவும் நடத்துவார் என்றும் அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் அஜித் நான் கடவுள் படத்திலும், சூர்யா வணங்கான் படத்திலும் எஸ்கேப் ஆனார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
அப்படி தன்னை படுமோசமாக அதுவும் 7 நாட்கள் நிர்வாணமாக்கி மரத்தில் தொங்கவிட்டார் என்று அவன் இவன் படத்தில் நடித்த நடிகர் ஓப்பனாக கூறியுள்ளார். 2011ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் - ஆர்யா இருவரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’.
இப்படத்தில் ஜமீனாக நடிகர் ஜி எம் குமார் நடித்திருப்பார். அவர் சமீபத்திய பேட்டியொன்றில் தன்னை நிர்வாணப்படுத்தி நடிக்க வைத்தார் பாலா என்று கூறியுள்ளார். அதேபோல் பாலா ஒரு காமெடி சென்ஸ் கொண்டவர் என்றும் ஒரு குழந்தையை போன்றவர் என புகழ்ந்து பேசியிருக்கிறார் நடிகர் ஜி எம் குமார்.