ஆதி - நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த வீடியோ ! இணையத்தை கலக்கும் வீடியோ !

Actor aadhi and actress nikki galrani engagement video getting viral

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆதி. தமிழ் மொழியில் மிருகம் என்னும் படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த ஈரம் திரைப்படம் செம ஹிட் ஆனது.

Actor aadhi and actress nikki galrani engagement video getting viral

ஆடு புலி, அய்யனார், அரவான், வல்லினம், மரகத நாணயம் என நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்கள் பெரிய வரவேற்பு பெறாத நிலையிலும், இவரது வரவேற்பு மக்கள் மத்தியில் குறைந்ததே இல்லை. இந்நிலையில், மரகத நாணயம் படத்தில் உடன் நடித்த பிரபல நடிகை நிக்கி கல்ராணி அவர்களை காதல் திருமணம் செய்யவிருக்கிறார் ஆதி.

Actor aadhi and actress nikki galrani engagement video getting viral

மொட்ட ஷிவா கெட்ட ஷிவா, சார்லி சாப்ளின் 2, டார்லிங் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர். கடந்த மார்ச் 24ம் தேதி இவர்களுக்கு நிக்கி வீட்டில் ரகசியமாக நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடந்தேறியுள்ளது.

Actor aadhi and actress nikki galrani engagement video getting viral

இந்நிலையில், இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆன நிலையில் நிச்சய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

Share this post