‘பாரத் பந்த்’ 2வது நாள் " : 60% பேருந்துகள் பேருந்துகள் இயக்கப்படும் என தொமுச சார்பில் அறிவிப்பு !

60 percent buses will be in work on day 2 of bus strike said by workers

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். இதன் முதல் நாளான நேற்று குறைந்த அளவிலே மட்டும் பேருந்துகள் இயங்கியதால், மக்கள் பெரும் அவதிக்குளாகினர். இன்று 2வது நாளாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடர்கிறது.

நேற்று பேருந்து சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் இன்று 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என தொமுச பொருளாளர் நடராஜன் நேற்று தெரிவித்திருந்தார். முன்னணி நிர்வாகிகள் மட்டும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் மட்டும் மாநகர போக்குவரத்துக் கழகத்தால் நாள் ஒன்றுக்கு 3,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் உரிய நேரத்தில் அனைத்து பேருந்துகளும் புறப்பட்டு விட்டதாக பணிமனை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஆட்டோ ஒட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

Share this post