OTT தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தில் மாற்று திறனாளியாக நடிக்கும் ஆதி.. வைரல் போட்டோ

Actor aadhi acts as physically challenged in clap movie

புதுமுக இயக்குனர் ப்ரித்வி ஆதித்யா இயக்கத்தில் நடிகர் ஆதி ஹீரோவாக நடிக்கும் படம் கிளாப். இப்படத்தில் அகன்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர், கிரிஷ்கா க்ரூப் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ஆதி ஒரு ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறார். ஒலிம்பிக் கனவுடன் இருக்கும் ஆதிக்கு ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுப்பவர் பிரகாஷ் ராஜ். ஆனால், விளையாட்டு துறையில் இருக்கும் அரசியல் பிரச்சனையில் சிக்கி தன் காலை இழந்த போதும், எப்படி சாதிக்கிறார் என சொல்வதே இப்படத்தின் கதை.

இப்படத்தில் முட்டிக்கு கீழ் காலை இழந்தவராக நடிக்கும் ஆதி வேறு பரிமாணத்தை காட்டியுள்ளார். விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Share this post