விஷாலுடன் திருமணம்? விளக்கம் அளித்த அபிநயா..!

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

பிரபல தயாரிப்பாளரான G.K. ரெட்டி அவர்களின் மகனான விஷால், நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்து வந்தவர். இதன் மூலம், இவருக்கு செல்லமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

இதனைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக மாறினார். இதன் நடுவே, இவர் நடிப்பில் வெளியான, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

நடிகர் சங்கத்தில் தற்போது முக்கிய பதவி வகித்து வரும் விஷால், சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்னும் தயாரிப்பு கம்பெனியும் நடத்தி வருகிறார். அவன் இவன், மருது, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

தற்போது இவர் நடிப்பில் லத்தி படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

நடிகர் விஷாலுக்கு 40 வயது கடந்த போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

இதன் பின்னர், ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார் விஷால், இவர்கள் இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் தீர்க்கமாக இருந்த விஷால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதனால் அனிஷா உடனான திருமணமும் நிறுத்தப்பட்டது.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

மேலும் விஷாலின் தந்தை விரைவில் விஷாலுக்கு பிடித்த பெண்ணுடன் திருமண நடக்கும் எனக் கூறியிருந்தார். அதேபோல் விஷாலும் அப்பா, அம்மா, பார்க்கிற பெண்ணெல்லாம் எனக்கு செட் ஆகுமா என்று தெரியவில்லை? நிச்சயம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், விஷால் தன்னுடன் பூஜை படத்தில் நடித்த நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

இவர்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த தகவலை நடிகை அபிநயா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ விஷால் மனைவியாக ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் விஷாலின் மனைவியாக நடித்து வருகிறேன். அதுகுறித்த போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் நாங்கள் காதலிப்பதாகவும், நிஜத்தில் திருமணமாகிவிட்டது என்பது போன்றும் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். ஆனால், அது முழுவதும் பொய்யான தகவல்” என்று தெரிவித்துள்ளார்.

abinaya answers regarding rumours spreading about vishal and abinaya marriage

Share this post