வாடகைத் தாயாக மாறிய சமந்தா.. surrogacyயில் நடக்கும் மோசடிகளை தோலுரிக்கும் யசோதா டிரைலர் இதோ!

yasodha trailer video getting positive response from audience

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் Ye Maaya Chesave என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

yasodha trailer video getting positive response from audience

தெலுங்கில், ஓ பேபி, ரங்கஸ்தலம், மகாநதி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

yasodha trailer video getting positive response from audience

2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பின்னர், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ள சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் அடித்தது. மேலும், திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

yasodha trailer video getting positive response from audience

தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரிப்பில் ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடவுள்ளனர். திரில்லர் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், முரளி சர்மா, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

yasodha trailer video getting positive response from audience

யசோதா திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. இப்படத்தின் தமிழ் டிரைலரை சூர்யாவும், தெலுங்கு டிரைலரை விஜய் தேவரகொண்டாவும், கன்னட டிரைலரை ரக்‌ஷித் ஷெட்டியும், மலையாள டிரைலரை துல்கர் சல்மானும், இந்தி டிரைலரை வருண் தவானும் வெளியிட்டனர்.

yasodha trailer video getting positive response from audience

இந்த டிரைலரை பார்க்கும் போது இப்படம் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதில் நடக்கும் முறைகேடுகளை பற்றி பேசுகிறது என்பது தெரிகிறது. இதில் நடிகை சமந்தா வாடகைத் தாயாகவே நடித்து இருக்கிறார். ஏழை வீட்டு பெண்ணான அவர் பணத்துக்காக வாடகைத் தாயாக மாறி அதன்பின் என்னென்ன பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. டிரைலர் விறுவிறுப்பாக உள்ளதால் படமும் இதேபோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post