'நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளும்படி இனி வற்புறுத்த மாட்டோம்' - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி திடீர் அறிவிப்பு

Zelensky announces not to bargain anymore to join nato union

பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை தங்களது பயங்கர ஆயுதங்களை வயது உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், சுமி உள்ள இடங்களில் ரஷ்யா தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

Zelensky announces not to bargain anymore to join nato union

ரஷ்யாவின் இந்த செய்கை பெரிய அளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க நாடுகள் வார்னிங் செய்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமும் இன்றி போர் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.

கிழக்கு உக்ரைனின் பகுதியான சுமி நகரை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் அதிரடி தாக்குதலை தொடந்து நடத்தி வருகிறது. பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து இந்திய தூதரகத்தின் அறிவிப்பின் படி கிமியிலிருந்து இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

இதனிடையே தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைனை நேட்டோவில் சேர்க்க அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை, ரஷ்யாவுடனான போர் மற்றும் பல்வேறு சர்ச்சைகளை கருத்தில் கொண்டு தான் நேட்டோ அமைப்பு உக்ரனை சேர்த்துக்கொள்ள அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் நேட்டோவில் அமைப்பிலிருந்து எதையும் கெஞ்சியோ, தானமாகவோ பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நாட்டின் தலைவராக நான் இருக்க விரும்பவில்லை என்றும் பகிரங்கமாக அவர் கூறியுள்ளார்.

Zelensky announces not to bargain anymore to join nato union

தனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை என குறிப்பிட்ட செலன்ஸ்கி, ரஷ்யாவால் சுதந்திரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான்பாஸின் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிப்போம் எனவும் கூறியுள்ளார்.

Share this post