மீண்டும் விஜய் - லோகேஷ் காம்போ... No சாங்... No ஹீரோயின்.. வேற மாதிரி எதோ ரெடி பண்ணுறாங்க போல !

Vijay and lokesh kanagaraj combo with no heroine and no song update soon to release

மாநகரம் மற்றும் கைதி என்னும் 2 படம் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Vijay and lokesh kanagaraj combo with no heroine and no song update soon to release

ஹாட்ரிக் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அடுத்தடுத்து தந்த நிலையில், இவருக்கு 3 வது படமே தளபதி விஜய் அவர்களை வைத்து எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Vijay and lokesh kanagaraj combo with no heroine and no song update soon to release

இதன் மூலம் மாஸ்டர் திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியானது. ஒரு அளவுக்கு சுமாரான படமாக அமைந்த போதிலும் படம் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில், தற்போது இவரது இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Vijay and lokesh kanagaraj combo with no heroine and no song update soon to release

இது ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் 67-வது படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படம் கைதி பட பாணியில் ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் எதுவும் இல்லாமல் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Share this post