வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள் தெரிந்துகொள்ள ஆன்லைனில் வசதி..

Voters list and voting booths can be identified online on respected sites

பிப்ரவரி 19ம் தேதியான நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் என்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்ற தகவலை சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரத்திற்கு, வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள www.ccmc.gov.in, www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள் மேலும் விவரங்கள் இந்த இணையத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதனை பெற இயலாதவர்கள் கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

Share this post