Cryptocurrency.. 11 கிலோ தங்கம்..118 கிலோ வெள்ளி.. ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல்.. 59 இடங்களில் நடந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Spvelumani house raid things has been taken by officers

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததால் அதிமுக அமைச்சர்கள் மீது எந்த வித புகாரும் எழவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலின்படி அனைத்து துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் நடைபெற்றதற்கான ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்தது.

அதன் படி அடுத்தடுத்து ரைடு, செக்கிங் என பதட்டத்துக்கு குறைச்சல் இல்லாமல் போயுள்ளது. ஊழல் ரீதியான புகார்களின் படி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் (போக்குவரத்துதுறை), சி.விஜயபாஸ்கர் (சுகாதாரத்துறை), எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்சித்துறை), தங்கமணி (மின்சாரத்துறை), கே.சி. வீரமணி (வணிகவரித்துறை), கே.பி. அன்பழகன் (உயர்கல்வித்துறை) ஆகியோருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள், குவாரிகள், உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர்.

Spvelumani house raid things has been taken by officers

இந்த சோதனையில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள், பல கோடி ரொக்கம், வெளிநாட்டு முதலீடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.2 கோடிக்கு வைப்பு தொகை ஆவணங்கள், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி, சந்திரசேகர், முருகேசன், ஜேசுராபர்ட், ராஜா, ராஜன் உள்ளிட்ட 17 பேர் மீதும் 10 நிறுவனங்கள் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, செப்டம்பர் 29ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேலுமணி ஆதரவாளர் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஆவணங்களை கணக்காய்வு செய்த போது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 23.5.2016-6.5.2021 ஆண்டு காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதும், அசையா சொத்துகள் வாங்கியதும் தெரியவந்தது.

இதன் மூலம் எஸ்.பி.வேலுமணி தனது வருமானத்தை மீறி ரூ.58.23 கோடிக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளார். இது அவரது வருமானத்தை விட 3,928 சதவீதம் கூடுதலாகும். எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர், சந்திர பிரகாஷ் உள்ளிட்ட 10 பேர் மற்றும் ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லரி, கான்ஸ்ட்ரோமால் பிரைவேட் லிமிட், ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது 58.23 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் 11.153 கிலோ கிராம் தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, கைப்பேசிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணினி, ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. மேலும் சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post