ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அதிரடி காட்டும் தமிழக அரசு..!

Ration shops to display stock availability on daily basis for the sake of consumers

தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் நிறைந்த தகவல் பலகை பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், கடைகளில் இதனை முறையாக செயல்படுத்தவில்லை.

இந்நிலையில், இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி, இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

‘பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் தகவல்கள் அடங்கிய தகவல் பலகைகள் பராமரித்து வைக்கப்பட வேண்டும் என அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டதை தொடர்ந்து நினைவூட்டப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும் - வேலை நேரம், நியாயவிலைக் கடையில் இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம்- ஆரம்ப இருப்பு, பெறப்பட்டது. விநியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை ஆகிய விவரங்களை உள்ளடக்கிய தகவல் பலகைகள் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த விவரம் கடைப்பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேலும், புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும்’

என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this post