பொருளாதார நெருக்கடி எதிரொலி : இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டம்..!

Protest has been initiated in sri lanka due to increased rates of basic things

கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நிலைமையில் இன்னும் எந்த முன்னேற்றமும் இலங்கையில் நடக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கியது இலங்கையின் பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இலங்கையின் ஜிடிபி மதிப்பு வரலாறு காணாத கடும் வீழ்ச்சியாக மைனஸ் 16.3 சதவிதம் அடைந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை ரூ.215, உருளைக் கிழங்கு ரூ.300, பெரிய வெங்காயம் ரூ.400, உளுந்து ரூ.2,000 ஆக விற்கப்படுகிறது.

கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க நிதி இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Protest has been initiated in sri lanka due to increased rates of basic things

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தலைமையில் பத்தாயிரத்துக்கு அதிமானோர் கலந்து கொண்டு ராஜபக்சே அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Share this post