மேகம் கருக்குது மழை வர பாக்குது.. காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலு பெற வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Rain expected from saturday due to weather condition

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை பற்றிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதில்,

17.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்

18.03.2022: தமிழகம, புதுவை மற்றும் அதை ஒட்டிய காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

19.03.2022 - 21.03.2022 : தமிழகம, புதுவை மற்றும் அதை ஒட்டிய காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

17.03.2022,18.03.2022 : தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்ச 36 டிகிரி செல்சியஸ் & குறைந்தபட்ச 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this post