கொஞ்ச நேரம் விளையாடுவோமா ! இதுல பூனை / எலி கண்ணுக்கு தெரியுதா ? அப்போ இப்டி பாருங்க

Optical illusion image that has been viral on social media

ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் பற்றி நிறைய நாம் பாத்திருப்போம். அந்த மாதிரியான ஒரு புகைப்படத்தை கலைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது குறித்த சுவாரசியம் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த புகைப்படம் வெறும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களால் ஆன ஒரு டிசைன் போல உள்ளது. ஆனால் இந்த டிசைனிற்குள் ஒரு பூனை/எலி ஒளிந்திருக்கிறதாம்.

முதலில் இந்த புகைப்படத்தை சாதாரணமாக ஒரு புகைப்படம் போல பார்க்கும் யாருக்கும் இதற்குள் ஒரு பூனை/எலியின் உருவம் இருப்பதை கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் இப்படியாக பார்த்தால் மட்டும் தான் தெரியும்.

சாதாரணமாக பார்த்தால் இந்த பூனை/எலி நம் கண்ணிற்கு தெரியாதாம். ஆனால் செல்போனை சற்று வலது அல்லது இடது புறமாக திரும்பி பார்த்தால் அல்லது உங்கள் தலையை வலது அல்லது இடதாக திரும்பி பார்த்தால் அல்லது சற்று தொலைவிலிருந்து பார்த்தால் பூனை/எலி தெரியுமாம்.

இதில் பூனை உருவம் தெரிந்தால் அவர்களுக்கு வலது பக்க மூளை சிறப்பாக செயல்படுகிறது என்றும், எலி தெரிந்தால் இடது பக்க மூளை சிறப்பாக செயல்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this post