களைகட்ட போகுது மதுர ! மீனாட்சி திருக்கல்யாணம்.. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தேதி அறிவிச்சாச்சுல..

Madurai festival dates has been announced for april month 2022

கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வு நிலை மட்டுமல்லாது வழக்கமாக நடக்கும் நிறைய நிகழ்ச்சிகள் வழிமுறைகள் அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாக, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரபலமாக நடைபெறும் சித்திரை திருவிழா, கொடியேற்றம், திருக்கல்யாணம், திக் விஜயம் உள்ளிட்ட நிகழ்வுகள் பக்தர்கள் இன்றி நடந்தது.

முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு, தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளும் பக்தர்களுடன் நடக்காத நிலையில் இந்தாண்டு நடைபெறவிருக்கிறது.

திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்ட நிலையில் கொடியேற்றம் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து, அம்மனுக்கு ஏப்ரல் 12ம் தேதி பட்டாபிேஷகம், 13ம் தேதி - திக் விஜயம், 14ம் தேதி - திருக்கல்யாணம், 15ம் தேதி - தேரோட்டம் நடைபெறவிருக்கிறது.

அழகர் ஆற்றில் இறங்குதல் ஏப்ரல்16ம் தேதி நடக்கிறது. அதிகாலை 05:50 முதல் 06:20 மணிக்குள் வைகையாற்றில் அழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். இரு ஆண்டுகளுக்கு பின் மீனாட்சி திருக்கல்யாணத்தையும், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியையும் நேரில் பார்க்க இருப்பதால் பக்தர்கள் உற்சாகத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Share this post