அடுத்தடுத்து ஒரு நகரமாக ஊரடங்கு அறிவிப்பு - என்னதான் நடக்குது சீனாவில் ?

Lockdown has been announced in one part of china

கடந்த 2 வருடங்களாக ஆட்டிப்படைத்து வந்த கொரோனா பரவல், தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டோருக்கு குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலயில், சீனாவில் அடுத்தடுத்து ஒவ்வொரு நகரமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பரவல் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. தற்போது, சுமார் 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரத்தில் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே, வடகிழக்கு பகுதில் வேறு சில நகரங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post