ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 376 அதிகரித்த தங்கம் விலை.. அட கடவுளே..

Gold and silver prices up today which shocks customers

கடந்த சில மாதங்களாக எந்த ஒரு பெரிய ஏற்றம் இறக்கம் சந்திக்காது இருந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்தது. நேற்று விலை கொஞ்சம் குறைந்து மக்களை திருப்தியடைய செய்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை கூடியுள்ளது.

சென்னையில் இன்று (பிப்ரவரி 17) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,710ஆக அதிகரித்துள்ளது. நேற்று இருந்ததை விட 42 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று 37,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 376 ரூபாய் அதிகரித்து 37,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.67.90 ஆக இருந்த விலை ரூ.68 ஆக 10 பைசா அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this post