முக்கிய நகரத்தில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை.. முன்பதிவு ஆரம்பம்.. ஏழுமலையான் பக்தர்களுக்கு Happy News..

Flight service has to be begin from march last from trichy madurai to tirupati

கொரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் மாதந்தோறும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது.

முன்பதிவு டிக்கெட் இணையதளம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கப்படும். மேலும் தினசரி 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் மதுரை நகரத்தில் இருந்து திருப்பதிக்கு தனது விமான சேவையை தொடங்கிய நிலையில், தற்போது, திருச்சி மாவட்டத்திலிருந்து திருப்பதி செல்லும் விமான சேவையை தொடங்கியுள்ளது.

கொரோனா 2ம் அலை வேகமெடுத்த காரணத்தினால் இடையில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3ம் அலை கொரோனா தாக்கமும் தீவிரமானது.

தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை மார்ச் 29ந் தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவையை மீண்டும் துவங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் திருச்சியில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடையும். பிறகு அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவித்துள்ளது.தற்போது அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Share this post