தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் : தியேட்டர்கள், உணவகங்கள், ஜிம், மால் - 100 % அனுமதி..

Corona restrictions are removed for theatres, malls, gyms for 100% usage

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் என பல தொழில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன்வழி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் காரணமாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, தியேட்டர்கள், உணவகங்கள், ஜிம்கள், வணிக வளாகங்களில் விதிமுறைகள் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து இருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் 100% பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்களுக்கும் 100% அனுமதி வழங்கி விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் நர்சரி, விளையாட்டுப் பள்ளி, கிரீச்கள், தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்டவைகளில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று முதல் செயல்பட அனுமதி.

ஆனால், திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம், அரசியல் பொது கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post