பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை - குஜராத் பாஜக அரசு முடிவு.. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு

Bagavath geethai to include in school syllabus

பகவத் கீதையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என குஜராத் கல்வித்துறை மந்திரி ஜிது வகானி தெரிவித்துள்ளார்.

பகவத் கீதையை அறிந்து கொள்ள மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்க்கும் வகையில் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும். குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12 ஆம் வகுப்புவரை பாடத் திட்டங்களில் பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி கூற, கதைகள், ஸ்லோகங்கள், பாடல்கள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள், வினாடி வினாக்கள் மற்றும் பாராயணம் போன்ற வடிவங்களில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஒலி-ஒளி வடிவில் பகவத் கீதை பாடத் திட்டம் அச்சிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக அரசின் இந்த நடவடிக்யை குஜராத் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. குஜராத் அரசின் முடிவை வரவேற்பதாக அம்மாநில ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிட்டுள்ளது.

Share this post