அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் : 38 பேருக்கு தூக்கு.. 11 பேருக்கு ஆயுள் தண்டனை

Ahmedabad bomb blast judgement declared for the people who are the reason for blast

குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் 2008ம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 240 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் வணிக வளாகங்கள், மக்கள் நடமாட்டம் இடங்கள் என நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இன்று நடந்த வழக்கின் விசாரணையில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவித்து, 26 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். அதிலும் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கபட்டு, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Share this post