8 மாவட்ட பாஜக தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கம்: மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி உத்தரவு..!!

8 bjp district members has been removed oredered by annamalai

சென்னை: பாஜக கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை அறிவித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

பாஜக கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை நீக்கி அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கட்சி மாவட்டங்களில் கீழ்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது.

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்,

திருநெல்வேலி - S. ஜோதி

நாகப்பட்டிணம் - T. வரதராஜன்

சென்னை மேற்கு - T.N.பாலாஜி

வட சென்னை மேற்கு - மனோகரன்

கோயம்புத்தூர் நகர் - A.pமுருகானந்தம்

புதுக்கோட்டை - செல்வம் அழகப்பன்

ஈரோடு வடக்கு - S.M.செந்தில்குமார்

திருவண்ணாமலை வடக்கு - C.ஏழுமலை

என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில் கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கியுள்ள நிகழ்வு அக்கட்சி தொண்டர்களிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 bjp district members has been removed oredered by annamalai

Share this post